வேலூர்: வேலூர் மாநகரில் நேற்று முதல் காட்பாடி- பாகாயம் பஸ்கள் மட்டும், மீண்டும் கிரீன் சர்க்கிள் வழியாக இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகரில் போக்குவரத்து ெநரிசலை குறைக்க வேலூரில் இருந்து கிரீன் சர்க்கிள் வழியாக லாரி, வேன், பஸ் போன்ற வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் மட்டும் கிரீன் சர்க்கிள் வழியாக இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து வாகனங்களும், நேஷ்னல் தியேட்டர், சர்வீஸ் சாலையில் சென்று சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்கின்றன.
இதில் காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படுவதால் காலநேரம் கூடுதலாகிறது. டீசல் செலவும் அதிகமாகிறது. எனவே கிரீன் சர்க்கிள் வழியாக பஸ்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் எனறு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் கலெக்டர், எஸ்பிக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்கள் மட்டும் வேலூரில் இருந்து கிரீன் சர்க்கிள் வழியாக சென்று, வேலூர் புதிய பஸ் நிலையம் முன்புற நுழைவு வாயில் வழியாக செல்ல கலெக்டர், எஸ்பி அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி நேற்று முதல் காட்பாடி-பாகாயம் பஸ்கள் மட்டும் கிரீன் சர்க்கிள் வழியாக இயக்கப்படுகிறது. மற்ற பஸ்கள், லாரிகள், வேன் என்று அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் சர்வீஸ் சாலை வழியாக சென்று சேண்பாக்கம் பாலம் வழியாக இயக்கப்படுகிறது என்று ேபாக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.