ஹோலி பண்டிகையில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் ஆண்கள் கை வைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்தத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்களை பூசி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நடப்பு ஆண்டு நடந்த ஹோலிப் பண்டிகை வடஇந்திய மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.
ஹோலி சர்ச்சை
நடப்பு ஆண்டில் ஹோலி பண்டிகை உலக மகளிர் தினத்துடன் சேர்ந்து வந்தது. ஆனால் ஹோலி பண்டிகையில் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. பெண்களின் அனுமதி இல்லாமலேயே கொண்டாட்டம் என்ற போர்வையில் அந்தரங்க உறுப்புகளை தொடுவது உள்ளிட்ட சில்மிஷங்களும் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், சகோதரியின் மகளை மடியில் உட்கார வைத்து, சிறுமி என்றும் பாராமல் அவளுடைய அந்தரங்க உறுப்புகளில் வண்ணப் பொடியை பூசுவது காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 6 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில் பேசும் வெளிநாட்டு பெண் ஒருவர், ஹோலி பண்டிகையில் எனது மார்பில் ஆண்கள் வண்ணப்பொடியை பூசினர். இதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை என்று கூறுகிறார். அதேபோல் பழைய வீடியோ ஒன்றில் தனது மனைவியை ஆண்கள் கட்டிபிடிப்பதும், மார்பில் மற்றும் முகத்தில் வண்ணப்பொடியை தூவுவதை கணவர் விளக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாணவியை ஆண்கள் கும்பலாக சேர்ந்த மாணவியின் உடலில் கைவைத்து வணணப் பொடியை தேய்க்கின்றனர், முட்டையை அடிக்கின்றனர். மேலும் ஒரு நபர் ஜப்பான் மாணவியை மார்பகத்தில் கைவக்க அவர் அந்த நபரின் கன்னத்தில் அறைவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
பாரத் மேட்ரிமோனி விளம்பரம்
ஹோலி பண்டிகையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல் குறித்து பாரத் மேட்ரிமோனி என திருமண தகவல் மையம் விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் தனது மேல் பூசப்பட்ட வண்ணப்பொடிகளை நீரில் கழுவுகிறார். கழுவியபின்பு அவரது வாய், கண்கள், கன்னம் என முகம் முழுவதும் காயங்களால் நிரம்பியிருக்கின்றன. இந்த விழிப்புணர்வு வீடியோ வெளியானதும், வலதுசாரி இந்துத்துவவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. பாரத் மேட்ரி மோனியை தடை செய்ய வேண்டும் என கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
இஸ்லாமிய வெறுப்பு
நடப்பு ஆண்டில் ஹோலி பண்டிகையில் வட இந்தியர்களின் மனநிலையை காட்சிப்படுத்தும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவாவை பேசி வரும் பாஜகவின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், அங்கு இஸ்லாமிய வெறுப்பு உள்ளது. அதனால் ஹோலிப் பண்டிகையின் போது வட இந்திய இளைஞர்கள் இஸ்லாமிய பெண்கள் மீது வண்ணப் பொடிகளை தூவுவதும், முட்டைகளை அடிப்பதும் என அட்ராசிட்டியில் ஈடுபடும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அதேபோல் இதை கண்டிக்கும் இஸ்லாமிய பெண்களின் மீது கல்லெறியும் சம்பவமும் நடந்துள்ளது. இஸ்லாமியர்கள் குறிவைத்து வண்ணப் பொடி தூவும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமுருகன் காந்தி
ஹோலி பண்டிகை என்ற பெயரில் பெண்களின் அனுமதி இல்லாமல் கண்ட இடங்களில் கைவப்பது, இஸ்லாமியர்களை குறிவைத்து வம்பிழுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஹோலி பண்டிகையை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பாஜக மற்றும் பார்ப்பனிய சக்திகள் முயற்சிக்கும் போது, பெண்களை இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான ஹோலி பண்டிகையை தடை செய்ய தமிழர்கள் குரல் எழுப்பாதது ஏன்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.