2023 ஹோண்டா Hness CB350, CB350RS அறிமுகம்

OBD-2  என்ஜின் மேம்பாடுடன் சில குறிப்பிடதக்க வசதிகளை பெற்ற 2023 ஹோண்டா Hness CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக 6 விதமான கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட கிட்களை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

என்ஜின் பவர் மற்றும் டார்க் தொடர்பான அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஹோண்டா CB350 பைக்கில் 20.78 bhp பவர் மற்றும் 30 Nm டார்க் வழங்குகின்ற 348.36 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா CB350, CB350RS

சிபி 350 பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் அலாய் வீல் அடுத்து, RS வேரியண்டில் 19 அங்குல வீல் 17-இன்ச் வீல் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் இரு மாடல்களிலும் பொதுவாக  டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் மற்றும் அடுத்தப்படியாக பிரேக்கிங் அமைப்பில் பொதுவாக டிஸ்க் பிரேக் சேர்க்கப்பட்டு ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. மூலம் கவனிக்கப்படுகிறது.

மற்ற அம்சங்களின் முழுமையான எல்இடி முகப்பு விளக்கு , அபாய விளக்குகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், USB சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் ஆகியவை பெற்று க புளூடூத் இணைப்புடன் கூடிய செமி டிஜிட்டல் கன்சோலைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா பிக் விங் டீலர்கள் வழியாக விற்பனை செயப்பட உள்ள கஸ்டம் கிட்ஸ் 6 விதமாக அறிமுகம் செய்யப்பட்டது. CB350 மாடலில் கஃபே ரேசர், கம்ஃபோர்ட், சோலோ கேரியர் மற்றும் டூரர் என நான்கு விதமான கஸ்டமைஸ் வசதிகளும் CB350 RS பைக்கில் கஃபே ரேசர் மற்றும் எஸ்யூவி கஸ்டம் என இரண்டு மொத்தமாக 6 விதமான கஸ்டமைஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2023 Honda H’ness CB 350 Price

Hness DLX Rs 2,09,857
Hness DLX Pro Rs 2,12,856
Hness DLX Pro Chome Rs 2,14,856

2023 Honda CB 350 RS Price

DLX Rs 2,14,856
DLX Pro Rs 2,17,857
DLX Pro Dual Tone Rs 2,17,857

(ex-showroom price)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.