Third Year Anniversary Of Coronavirus: கடுமையான கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டது. இதை முன்னிட்டு, சுமார் 200 உலகத் தலைவர்கள் ‘சமத்துவமான தடுப்பூசி விநியோகம்’ (Vaccine Equity) இன்று வெளியிடப்பட்ட கடிதத்தில்,”கொரோனா கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது உலகம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
சமத்துவமின்மை
“இப்போது எடுக்கப்பட்ட முடிவுகள், எதிர்கால உலகளாவிய சுகாதார நெருக்கடிகளுக்கு உலகம் எவ்வாறு தயாராகிறது மற்றும் செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கும். உலகத் தலைவர்கள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதில் செய்த தவறுகள் குறித்து சிந்திக்க வேண்டும். அதனால் அவை மீண்டும் மீண்டும் நடக்காது,” என்று அவர்கள் கூறினர்.
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ஆபத்தான கொரோனா நெருக்கடி ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தொற்றுநோய்க்கு எதிரான செயல்பாடில் பெரும் பின்னடைவாக இருந்தது என்றால் அது வெளிப்படையான சமத்துவமின்மைதான் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். அதை விமர்சித்த அவர்கள், இனி ஒருபோதும் அப்படி நடைபெறாது என்று உறுதியளிக்குமாறு உலகத் தலைவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என உறுதியளித்துள்ளது.
மேலும் படிக்க | Li Qiang: சீனாவின் புதிய பிரதமர்! நெருங்கிய நண்பரை பிரதமராக்கினார் ஜி ஜின்பிங்
“கோவிட்-19 தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சோதனைகளுக்குப் பின்னால் பல தசாப்தங்களாக பொது நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் உள்ளன. அரசாங்கங்கள் வரி செலுத்துவோர் பணத்தை ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் முன்கூட்டிய ஆர்டர்களில் கோடிக்கணக்கில் செலுத்தி, மருந்து நிறுவனங்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கின்றன.
மக்கள் தடுப்பூசிகள், மக்கள் பரிசோதனைகள் மற்றும் மக்கள் சிகிச்சைகள் என்று வலியுறுத்தும் அது, தேவையின் அடிப்படையில் தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, மருந்து நிறுவனங்கள் முதலில் பணக்கார நாடுகளுக்கு டோஸ்களை விற்பதன் மூலம் தங்கள் லாபத்தை அதிகப்படுத்துகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
13 லட்சம் பேரை காப்பாற்றியிருக்கலாம்
2021ஆம் ஆண்டில், தடுப்பூசிகள் சமமாக விநியோகிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு 24 வினாடிகளுக்கும் ஒரு தடுக்கக்கூடிய மரணம் அல்லது சுமார் 1.3 மில்லியன் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கடந்த ஆண்டு ஒரு ஆய்வு காட்டுகிறது.
இந்த ஆய்வை மேற்கோள்காட்டி, ஒரு தொற்றுநோய் உடன்படிக்கையை நோக்கிய தற்போதைய சர்வதேச உடன்படிக்கையை ஆதரிக்குமாறு தலைவர்களையும் அரசாங்கங்களையும் கடிதம் வலியுறுத்தியது. இந்த திறந்த கடிதம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மக்கள் தடுப்பூசி கூட்டணியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் மேலும் பல நோபல் பரிசு பெற்றவர்கள், நம்பிக்கை தரும் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் உள்ளனர். இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் தற்போதைய மற்றும் முன்னாள் ஐ.நா. ஏஜென்சி தலைவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் முன்னாள் தலைவர்களும் அடங்குவர்.
மேலும் படிக்க | திவாலான சிலிக்கான் வேலி வங்கி! பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறதா அமெரிக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ