சீமான் சொன்ன 'காக்கா கதை'… நெய் சோறு, அவிச்ச முட்ட… நெட்டிசன்கள் கலாய்

”விமான நிலையத்தில் உள்ள ராணுவ வீரர்கள் எனக்கு சல்யூட் அடித்தார்கள், இலங்கையில் பிரபாகரனுடன் சேர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன், ஈழத்தில் AK-74 துப்பாக்கியில் பயிற்சி எடுத்தேன், தடை செய்யப்பட்ட மானை தனக்காக சுட சொன்னார் பிரபாகரன்” என்று பல விஷயங்களை

சொல்ல அது கதை என சமூக வலைத்தளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீமான் புதிதாக காக்கை கதை ஒன்றை கூறி நெட்டிசன்களுக்கு கன்டென்ட் கொடுத்துள்ளார்.

சாட்ட துரைமுருகன் எடுத்த நேர்காணலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்த நேர்காணல் அவர் சொன்ன ஒரு விஷயத்தை நகைச்சுவையாக்கி பகிர்ந்து வருகின்றனர். அது, ”என் வீட்டு மாடியில் தினமும் புறாக்களுக்கு இரை வைக்கிறோம்.. அதேபோல, மற்ற பறவைகளுக்கும் தினமும் சோறு வைப்போம்

ஆனால், எங்க வீட்டுக்கு வரும் காக்கைகள் சோறு திங்காது.. அவைகளுக்கு தினமும் 15 அவிச்ச முட்டையை வைத்தால் நல்லா சாப்பிடும்… அதிலும் சோறு என்றால் அந்த காக்கைகள் நெய் சோறுதான் சாப்பிடும்… சரியா மாலை மூன்று மணி ஆயிடுச்சினா எல்லா காக்கைகளும் வீட்டு மாமரத்தில் வந்து அமர்ந்துவிடும்… அவைகளுக்கு தெரியும், சீமான் வீட்டுக்கு போனால் இதெல்லாம் கிடைக்கும்னு” என்று சீமான் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சீமானின் ஆடம்பர வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பேசப்படுவதுண்டு. சென்னை கடற்கரையோரம் அவர் வசிக்கும் பங்களா வீட்டுக்கு மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வாடகை, 70 லட்சம் ரூபாயில் சொகுசு கார், கொடைக்கானலில் நிலம், விலையுயர்ந்த ஆடைகள் என புகைப்படங்களுடன் பதிவிட்டு அவரது வருமானம் குறித்து கேள்வி எழுப்பப்படும்.

அதற்கு பலமுறை சீமான் பதில் அளித்துள்ளார். ”நான் பிச்சை எடுத்துதான் அரசியல் செய்கிறேன்… வெளிநாடுகளில் உள்ள தம்பிகள் எனக்கு மாதந்தோறும் பண உதவி செய்து வருகிறார்கள்.. அங்கிருந்து உடை வாங்கி அனுப்பி வைப்பார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.