ஆமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் 36/0 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் (17), சுப்மன் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. கேப்டன் ரோகித் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சதமடித்தார். 195 பந்துகளை எதிர்கொண்டஅவர் 124 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். புஜாரா 42 ரன்களுக்கு அவுட்டானார். விராட் கோஹ்லி 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
2000
ஆமதாபாத் டெஸ்டில் ஜொலித்த, புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரரானார். ஏற்கனவே, ஜாம்பவான் சச்சின், லட்சுமண், டிராவிட் இந்த இலக்கை எட்டி உள்ளனர்.
17000
ஆமதாபாத் டெஸ்டில் 35 ரன் எடுத்த கேப்டன் ரோகித், சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 17 ஆயிரம் ரன்களை கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 438 போட்டியில் 17014 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே, ஜாம்பவான் சச்சின் (34357 ரன்), கோஹ்லி (25047), டிராவிட் (24064), கங்குலி (18433), தோனி (17092) இந்த இமாலய இலக்கை வசப்படுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement