இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையிலுள்ளது.
4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக நடக்கும் இப்போட்டியில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார்கள்.
@cricbuzz
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (rohit sharma) அபாரமாக விளையாடி 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சுப்மன் கில் சதம்
அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
@cricbuzz
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டம் இன்று துவங்கியது.
விராட் கோலியின் 75வது சதம்
விராட் கோலி(virat kohli) மற்றும் கே.எஸ் பரத் ஆகியோரது பார்ட்னர்ஷிப் விக்கெட் இழக்காமல் சிறப்பாக ஆடியது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
@cricbuzz
இதனைத் தொடர்ந்து 79 ஓட்டங்களில் அக்ஷர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழக்க, ஒருபுறம் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த விராட் கோலி, வேகமாகச் சதமடிக்க முனைப்புக் காட்டி 186 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் அதிரடியாக ஆடி கேட்ச் ஆனார்.
@cricbuzz
இந்திய அணி மொத்தமாக 571 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதில் 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி கடைசி இன்னிங்ஸில் விளையாடுகிறது.
இந்திய அணி அவுஸ்திரேலியாவை 150 ஓட்டங்களுக்குள் சுருட்டி அவுஸ்திரேலியா நிர்ணயிக்கும் இலக்கை இந்திய அணி எட்டினால், இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால், நாளைய போட்டி சுவாரசியமாகயிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.