வாஷிங்டன்: அமெரிக்க வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா ஆகிய 2 இந்திய அமெரிக்கர்கள் உட்பட 14 பேரை நியமித்துள்ளார் அதிபர் ஜோ பைடன்.
இவர்கள், பொது வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், தொழில், விவசாயம், சிறு வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இது தொடர்பான ஆலோசனைகளை வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கு இவர்கள் வழங்குவார்கள்.
இந்தக் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி அத்வைதி, இப்போது உலகின் 3-வது பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனமான ப்ளெக்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியாவின் பிட்ஸ் பிலானியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
மற்றொரு இந்தியரான மணிஷ் பாப்னா, இப்போது சர்வதேச சுற்றுச்சூழல் ஆதரவு குழுமமான நேச்சுரல் ரிசோர்சஸ் டிபன்ஸ் கவுன்சில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.