புதுடில்லி : அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் அருகில் உள்ள சாமிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்.
சமூக நீதிக்காக போராடிய வைகுண்டரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அஞ்சலிகள். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர்.
தாழ்த்தப்பட்டோரை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டவர். அவரது எண்ணங்களும், கருத்துக்களும் பல தலைமுறைகளையும் தாண்டி அனைவரையும் ஊக்குவிக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement