வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி, லோக்சபா செயலாளரிடம் திமுக எம்.பி.,க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் கொடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இதனை கவர்னர் திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல்நாளில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்புதீர்மானம் கோரி திமுக எம்.பி.,க்கள் குழு தலைவர் பாலு, லோக்சபா செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தினால், அதிகமான பணத்தை இழந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement