அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி இருந்த நிலையில், இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது என்று நடிகரும், கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
சதம் விளாசிய விராட் கோலி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
The Man. The Celebration.
Take a bow, @imVkohli 💯🫡#INDvAUS #TeamIndia pic.twitter.com/QrL8qbj6s9
— BCCI (@BCCI) March 12, 2023
விராட் கோலி கடையாக 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இருந்தார்.
அந்த வரிசையில் கிட்டத்தட்ட 1,205 நாட்களுக்கு பிறகு, விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இது அவருக்கு டெஸ்ட் போட்டியில் 28வது சதமாகும்.
மேலும் இந்த சதத்தின் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
BCCI
மனைவி அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி
இந்நிலையில் விராட் கோலி சதமடித்தது குறித்து நடிகையும், அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், விராட் கோலி சதமடித்த புகைப்படத்தை பகிர்ந்து, “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், அமைதியான சிறப்பான ஆட்டம்” இந்த பண்பு தான் எப்போது ஈர்க்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விராட் கோலி தனது உடல் நலக் குறைவை பொருட்படுத்தாமல் அணிக்காக சதம் விளாசி இருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பெருமிதத்தில் சிலாகித்து வருகின்றனர்.