இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம்


கண்டியில் நேற்று(11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம் | Woman S Death Caused A Sensation In Sri Lanka

குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் தாய்க்கு கணவன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டது.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவருடன் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 9.50 மணியளவில் கணவர் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதாக கூறி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம் | Woman S Death Caused A Sensation In Sri Lanka

காலையில் இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.