பீஜிங் : ஈரான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட்டுள்ளதை பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வரவேற்றுள்ளன.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாகஷியா பிரிவினர் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிதாகபேசப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலானஉறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஈரான் உடனான உறவை முறிததுக் கொள்வதாகசவுதி அரேபியா அறிவித்தது.
சவுதி அரேபியா – ஈரான் நாடுகளிடையே மீண்டும் நட்புறவு ஏற்பட உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த விஷயத்தில் இடைத் தரகராக செயல்பட்டு, இரு நாட்டு பிரதிநிதிகளுடனும் சீனா தொடர்ந்து ஆலோசித்து வந்தது.
இது தொடர்பான இறுதிகட்ட பேச்சு, கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. இதன்பலனாக, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதானம் அடைந்துள்ளன. இதை சவுதி அரேபியாவும், ஈரானும் நேற்று முன்தினம் கூட்டாக உறுதி செய்தன. அடுத்த இரண்டு மாதங்களில் துாதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகள் மத்தியில் மீண்டும் நட்புறவு ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐ.நா., சபை, இதற்கு முயற்சி எடுத்த சீனாவை பாராட்டி உள்ளது.
அதேபோல், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளும் ஈரான் – சவுதி அரேபியா மீண்டும் சேர்ந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்