‘என் நிலத்தில் என் மொழி தான் பேசனும்’ – கெத்து காட்டிய ஆட்டோ ஓட்டுநர்.!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அது பிரதமர் நேரு என்றாலும் சரி மோடி என்றாலும் சரி. இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் கண்ட மாபெரும் போராட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உள்ளூர் மொழிகளை அழித்து தான் இந்தி மொழி பரவியது என்பது மொழியியளார்களின் குற்றச்சாட்டு.

இந்தியை தேசிய மொழியாக்குவதன் மூலம் தமிழ், குஜராத்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளை பேசும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படும் வாய்ப்புள்ளதாக தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களான அண்ணாதுரை, கலைஞர் உள்ளிட்டவர்களின் கருத்தாக உள்ளது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியாவின் முதன்மை மக்களாக கருதிக் கொள்கின்றனர். மத்தியில் பாஜக ஆட்சியில் வந்தது முதலே இந்தி திணிப்பு அதிகரித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய தகுதி தேர்வுகள், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தி முதன்மையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பது தான் பாஜகவின் அடிப்படை கொள்கைகளாக உள்ளது. சென்னை விமானநிலையத்தில் இந்தி பேச வற்புறுத்தப்படுவதாக சமீபத்தில் நடிகர் சித்தார்த் பேசினார்.

அதேபோல் மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி பேசுவோர்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தி தெரிந்து கொண்டால் என்ன பிரச்சனை என கேட்பவர்களும் உண்டு. இந்திய மண்ணில் பல நூறு ஆண்டுகளாக தங்கள் தாய் மொழிகளை மக்கள் பேசி வரும்போது, இனி இந்திதான் முதன்மை மொழி என்று கூறினால் அவர்களின் தாய் மொழிக்கு கொடுத்த மரியாதை என்ன என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. உண்மையில் பல மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்பதை மத்தியில் உள்ளவர்கள் உண்ர்ந்து கொள்வதில்லை என்பது தான் குற்றச்சாட்டாக உள்ளது.

அதற்காகத்தான் தமிழகத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் பொருந்திய டீஷர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
அதேபோன்ற டீ ஷர்ட்ட்டை அணிந்ததும் பேசுபொருளானது. அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘என் தாய்மொழி கன்னடம், எனக்கு இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் தாங்கிய டீஷர்ட்டும் சமீபத்தில் வைரலானது.

நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த செயலுக்கு எதிர்வினை ஆற்றிய சிலர், உத்தரபிரதேசத்தில் உள்ள நபர், தமிழ் நகி மாலும் என என டீஷர்ட் போட்டால் இவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேட்டார். ஆனால் உத்தரபிரதேசத்தில் தமிழ் திணிக்கப்படவில்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

இந்தநிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இந்தி பேச முடியாது என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியை தாய்மொழியாக கொண்ட இரு பெண்கள் ஒரு ஆட்டோவில் ஏறுகின்றனர். அவர்கள் ஓட்டுநரிடம் இந்தியில் பேச, அவர் ஆங்கிலத்தில் பேசுங்கள் என சொல்கிறார். இந்தி தேசிய மொழி என நினைத்த பெண்களிடம், நான் எதற்கு இந்தி பேச வேண்டும், நீங்கள் கன்னடத்தில் பேசுங்கள் என ஓட்டுநர் கூறுகிறார்.

பகலில் விவசாயிகள் இரவில் துப்பாக்கி ஏந்திய போராளிகள்; காஷ்மீர் ரிப்போர்ட்.!

அதற்கு நாங்கள் எதற்கு கன்னடத்தில் பேச வேண்டும் என கூறிய பெண்களிடம் நீங்கள் எனது நிலத்தில் இருக்கிறீர்கள், வேலைக்காக இங்கு வந்துள்ளீர்கள், ஆகவே எனது மொழியை தான் நீங்கள் பேச வேண்டும், இந்தியில் பேச இது உங்கள் நிலம் இல்லை என கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.