கடலூர் மாவட்டத்தில் வீடு புகுந்து வாலிபர் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புலிவளம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவருடைய மகன் அமர்நாத் (21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்த அமர்நாத், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து, சம்பவத்தன்றும் அமர்நாத், வீட்டில் தனியாக இருந்த மாணவியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மாணவி அமர்நாத்திடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அமர்நாத் திருமணத்திற்கு மறுத்ததால் மாணவி இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.