பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார்.
விமானப் பணிப்பெண்
உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
Twitter @ians_india
கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்துள்ளார்
முதற்கட்ட விசாரணையில், அர்ச்சனா ஒரு புகழ்பெற்ற விமான நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்றும், மென்பொருள் நிபுணரான தனது காதலனான ஆதேஷை சந்திக்க துபாயிலிருந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆதேஷ் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அர்ச்சனாவின் உடல் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக கூறப்படுகிறது. பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
An air hostess, who flew down to #Bengaluru from Dubai to meet her male friend, reportedly jumped to her death on the intervening night of Friday &Saturday.
The deceased identified as 28yr-old Archana from HP. Police state that both were in a relationship for past several years. pic.twitter.com/Ww5lIdCAR4
— IANS (@ians_india) March 11, 2023