காதல் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறேன்: ஆத்மிகா
'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பிறகு, கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'நரகாசூரன்' படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே உதயநிதி உடன் இவர் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படம் மார்ச் 17ல் வெளியாகிறது. இப்படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். ஆனால் அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா, புகழா எது முக்கியமென்றால் பணம்தான் முக்கியம் என்பேன். ஏனெனில் அதுதான் எதார்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.