வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தில், நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் ரூபாய் நோட்டுகளை வீசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், வல்சாத் அக்னீவர் கவு சேவாதள என்ற அமைப்பு சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், கிர்திதன் காத்வி என்ற நாட்டுப்புற பாடகர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவரது பாடல்களை கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பாடகர் மீது வீசினர். ரூ.10, 20, 50 மற்றும் 100 நோட்டுகளை வீசினர்.
இதனால், அவரது பாடகரை சுற்றி ரூபாய் நோட்டுகளாக காணப்பட்டன. இதற்கு மத்தியிலும் பாடகர் தனது இசைநிகழ்ச்சியை தொடர்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement