புதுக்கோட்டை மக்களவை தொகுதி திமுக எம்.பியாக இருப்பவர் எம்.எம்.அப்துல்லா. இவர் கழகத்தின் என்.ஆர்.ஐ விங் செயலாளராகவும் இருக்கிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறார். இதேபோல் ஊடகங்களில் மிகவும் பிரபலமான சவுக்கு சங்கர் சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியாக காட்டமான கருத்துகளை முன்வைப்பவர். மேலும் தனக்கு கிடைக்கும் அரசியல் ரீதியிலான பின்புல தகவல்களை பொதுவெளியில் போட்டு உடைப்பவர்.
சின்னமலை ஐடி விங்
இதனாலேயே அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் ஆகாத நபராக சவுக்கு சங்கர் வலம் வருகிறார். இந்நிலையில் சின்னமலை ஐடி விங் குறித்து சவுக்கு ஒரு ட்வீட் போட பதிலுக்கு
அப்துல்லா ட்வீட் போட காரசார விவாதம் பற்றிக் கொண்டது. அதாவது, திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா சின்னமலை ஐடி விங்குக்கு கடந்த வியாழன் அன்று வருகை தந்து சல்லிகளை உற்சாகப்படுத்தி உள்ளார்.
சபரீசன் துபாய் முதலீடுகள்
மாதம் இரு முறை அங்கே வருகை தருகிறார். திராவிட மாப்பிள்ளையின் துபாய் முதலீடுகளை தான் தான் பார்த்துக் கொள்வதாக பெருமையோடு கூறிக் கொள்வதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். அதற்கு, ஓபாமாவின் சுவிஸ் முதலீடையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்? என்று அப்துல்லா கிண்டலாக பதிலடி கொடுத்தார். மேலும் சின்னமலைக்கும் வந்துட்டேன்.
மீம்ஸ், ட்ரோல்
அடுத்து எங்கப்பா வரணும் என்று சுந்தர் சி, வடிவேலு இடையிலான காமெடி புகைப்படத்தை மீம்ஸ் போல பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, நான் இப்ப எம்.பி ஆகிட்டேன். முன்ன மாதிரி ட்ரோல் மாஸ்டரா மட்டும் இருந்திருந்தா. ‘ஒரு அத்தை ஒரு மாமா’ குட் காம்பினேஷன்னு காதல் படத்துல வர்ற டைரக்டர் கேரக்டர் படம் போட்டு மீம்ஸ் போட்டு இருப்பேன். இப்ப அப்படில்லாம் செய்யக் கூடாது. தப்பு எனக் குறிப்பிட்டார்.
எம்.எம்.அப்துல்லா பதில்
இதன் தொடர்ச்சியாக தன்னை பிம்ப் போல சின்னமலை ஐ.டி டீம் ஃபோட்டோஷாப் செய்ததாக சவுக்கு சொல்கிறாரே? சின்னமலை டீம் செய்து இருந்தால் மெரினா பீச் பின்ணணியில் ‘கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து’ என போட்டு இருப்பார்கள். இவ்வளவு டீசண்டா பண்ணிருக்க மாட்டாங்க!! எனவே அவர்கள் அல்ல என்று எம்.எம்.அப்துல்லா சுட்டிக் காட்டினார்.
பாஜக ஐடி விங் தலைவர்
முன்னதாக தமிழக பாஜக ஐடி விங் மாநில தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதற்கு “நன்றி திமுக ஐடி விங்” என சவுக்கு பதிவிட்டிருந்தார். இதை சின்னமலையில் செயல்பட்டு வரும் ஐடி டீம் தான் செய்திருக்க வேண்டும் என்றும், அதை திமுக எம்.பி அப்துல்லா கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தீவிரமடைந்த மோதல்
இந்த விஷயத்தை தான் மேலே அப்துல்லா சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கு இவனெல்லாம் எம்பி. நல்ல ஆளை எம்.பி ஆக்கிருக்கீங்க மு.க.ஸ்டாலின் என்று சவுக்கு பதில் ட்வீட் போட்டார். உடனே பின்ன உன்னை மாதிரி ஆளையா எம்.பி ஆக்க முடியும்? எனக் கேட்டார். பின்னர், ஏன் அப்துல்லா டென்சன் ஆகுற? எத்தனாவது ரவுண்டு? என சவுக்கு கேட்கிறார். அதற்கு மிக மோசமான வார்த்தைகளை அப்துல்லா பயன்படுத்தினார்.
குட்பை சொன்ன அப்துல்லா
அப்போ இல்லையா? எப்படி எம்.பி சீட் வாங்குன என சவுக்கு கேட்கிறார். கடைசியில் அப்துல்லா ட்விட்டர் மோதலை தவிர்த்து விடுகிறார். எங்கப்பா போயிட்ட? இப்படி பாதிலயே விட்டுட்டு போனா எப்படிப்பா? உனக்கு விவாதிக்க இண்ட்ரஸ்டே இல்லையே. ராஜா ஒரே ஒரு ரிப்ளை பண்ணுப்பா என சவுக்கு சங்கர் கேட்பதுடன் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.