பட்டப் பகலில் திருப்பூரில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பல்லடம் : அவிநாசி பாளையம் பகுதியை அடுத்த பெருந்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். ரியல் லைஃப் தொழில் அதிபரான இவருக்கு அண்மையில் ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்துள்ளது.
கலாமணி என்ற அந்த பெண், சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இடம் விற்பனைக்கு இருப்பதாக கூறி உள்ளார்.
நிலம் வணக்க ஆசைப்பட்ட சந்திரன் நிலத்தை பார்க்க வரலாமா என்று கேட்டுள்ளார். அதற்க்கு கலாமணி, வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம் என்றுள்ளார்.
இதனை அடுத்து சந்திரன் தனது காரில் தனி ஆளாக சென்றுள்ளார். அப்போது அங்கு கலாமணி, தனது பெண் தோழி சுமதி, மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரனை அடித்து, உதைத்து, கத்தியை காட்டி மிரட்டிநகைகளை பிரித்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து தப்பிய சந்திரன், இந்த சம்பவம் குறித்து அவினாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமுறையாக இருந்த கலாமணி, சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள மூன்று ஆண் நண்பர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.