தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது: அஜித் பட வாய்ப்பு பறிபோனது குறித்து விக்னேஷ் சிவன் பதிவு

நடிகர் அஜித்குமாரின் 62வது படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல் பரவி வருகின்றன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளுக்கும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது. எனது 'விக்கி 6' படத்துக்காக இதயத்திலிருந்து தயாராகிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் என்னுடன் தன்மையாக நடந்துகொண்ட மக்களுக்கும், கடவுளுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவும் என் மீதான நம்பிக்கையும் என்னை அடையாளம் காண மட்டுமல்ல, நிச்சயமற்ற இந்த சூழ்நிலையில் வாழவும் உதவியது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவு, 'ஏகே 62' பட வாய்ப்பு பறிபோனதையும், அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு, அடுத்த படத்திற்கு தயாராவதையும் காட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.