வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2023-24 ம் ஆண்டுக்கான பார்லிமென்ட் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்கள் நடக்கும் எனவும், பிப்.,14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் ஜன.,31ல் துவங்கியது. பிப்.,1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்., 13 வரை நடந்த முதல் அமர்வில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன.
இந்நிலையில் இரண்டாவது அமர்வு நாளை (மார்ச் 13) துவங்குகிறது. ஏப்.,6 வரை நடக்கும் இக்கூட்டத்தொடர் 17 அமர்வுகளை கொண்டிருக்கும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் ஆலோசனை நடத்தினார்.
அதேநேரத்தில், இந்த கூட்டத்தொடரில், அதானி விவகாரம், பணவீக்கம், பெட்ரோலிய பொருட்கள் விலை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பேச்சு மற்றும் விமர்சனம் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே மோதலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement