அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல் நிலையம் சென்ற நபர், தம்மை கைது செய்ய வேண்டும் எனவும், தமது பிஞ்சு மகளை துன்புறுத்திய நபரை இறுதியில் பழி வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம்
பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவலில், லெவி ஆக்ஸ்டெல் என்ற நபரே காவல் நிலையம் சென்று தம்மை கைது செய்ய வலியுறுத்தியவர்.
உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் காணப்பட்ட நிலையில் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர்.
@getty
பின்னர் முன்னெடுத்த விசாரணையில், 27 வயதான லெவி ஆக்ஸ்டெல் தமது பிஞ்சு மகளை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய 77 வயது லாரன்ஸ் வி. ஸ்கல்லி என்பவரை அடித்தே கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் மான் கொம்பு ஒன்றால் ஸ்கல்லியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்கல்லியின் பின்னணியை விசாரித்த பொலிசார், சம்பவம் உண்மை என்பதை உறுதி செய்ததுடன் அவர் மீதும் வழக்கு பதிந்தனர்.
இரண்டாவது நிலை கொலை வழக்கு
ஸ்கல்லி தாக்கப்படும் சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்த நபர் ஒருவரே 911 என்ற இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், ஸ்கல்லி தமது குடியிருப்பில் சடலமாக கிடப்பதை உறுதி செய்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டாவது நிலை கொலை வழக்கை எதிர்கொள்ளும் லெவி ஆக்ஸ்டெல் வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 10ம் திகதி இந்த வழக்கின் மறு விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
சுமார் 1,340 மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமப்பகுதியில் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றனர்.