முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பை இழிவுபடுத்திய எடப்பாடி; வீடியோ வைரல்.!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, தான் கருணாநிதியின் மகன் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, திமுக தலைவர் முக ஸ்டாலினையும், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தவர்

. மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும் எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார்.

அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின். ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை இ.பி.எஸை யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிகைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன.

இ.பி.எஸ்ஸுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது. நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற தில்லியிலிருந்து மோடி என்கிற டாக்டர் வருகிறார்” என்று தொடர்ந்து பேசினார் ஆ. ராசா.

இதில், நடுவில் உள்ள சில பகுதிகள் நீக்கப்பட்டு, ஆ. ராசாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் இதனைக் கடுமையாக கண்டித்தனர். அதேபோல் தனது தாயை இழிவுபடுத்தியதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் கலாச்சாரம் இது தான் எனக் கூறினார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பை இழிவுபடுத்தும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் சிவகங்களை நடைபெற்றது. அப்போது அந்தவிழாவில் பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கடி தான் கலைஞரின் மகன் என கூறிவருகிறார். அவர் கலைஞரின் மகன் இல்லை என யார் கூறினர். நீங்கள் ஏன் தேவையில்லாமல் சந்தேகத்தை கிளப்புகிறீர்கள்.

என்ன பரீட்சை டென்ஷன்ல இருக்கீங்களா? மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை!

எப்போது பார்த்தாலும் நான் கலைஞரின் மகன் தெரியுமா என கூவிக் கொண்டு இருக்கிறார்.யாருக்கு தெரியாது நீங்கள் கலைஞரின் மகன் என்று. திரு கருணாநிதியின் மகன் தான் திரு ஸ்டாலின் என்று ஏற்றுக் கொள்கிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. கலைஞரின் மகன் தான் நீங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்’’ என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதலமைச்சரின் முக ஸ்டாலின் பிறப்பை இழிவுபடுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக உடன்பிறப்புகள் பொங்கியுள்ளனர். கடந்த முறை திமுக துணைப் பொதுச் செய்லாளர் ஆ.ராசா, அரசியல் ரீதியாக கள்ள உறவுக்கு பிறந்தவர் எடப்பாடி என கூறியதற்கு, ஏதோ தனது தாயை இழிவுபடுத்தியதாக பரிதாபம் தேடிய எடப்பாடி, இப்போது நேரடியாக முதலமைச்சரை இழிவுபடுத்தியதிற்கு எந்த நடுநிலையாளர்களும் கண்டிக்கவில்லை என திமுக ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.