கடந்த சனிக்கிழமை இரவு இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தஹிசார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ”தஹிசரில் ஆசிர்வாத் யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடந்தது. அந்த பேரணி வாகனத்தில் ஏக்நாத் ஷிண்டே அருகில் எம்எல்ஏ பிரகாஷ் சர்வே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, எம்எல்ஏ பிரகாஷ் சர்வேவுக்கு ஷீத்தல் மத்ரே முத்தமிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி மராட்டிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானதை தொடர்ந்து, அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டு வேண்டுமென்றே அவதூறாகப் பகிரப்படுவதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டதாக மனாஸ் குவார் (26) மற்றும் அசோக் மிஸ்ரா (45) ஆகியோர் மீது தஹிசார் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 354,509,500,34 மற்றும் 67 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே , இந்தச் செயலுக்கு காரணமானவர்களைக் கடுமையாக சாடியதோடு தனது குணத்தை அவர்கள் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினார். மேலும், அரசியல் களத்தில் ஒரு பெண்ணை விமர்சிக்க எதுவும் இல்லை என்றால் அவளது நடத்தையை இழிவுபடுத்துவது பாழாப்போன கூட்டத்தின் கலாச்சாரம் என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
gay மற்றும் lesbian திருமணங்களை ஏற்க முடியாது; ஒன்றிய அரசு பிடிவாதம்.!
இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் ஏக்நாத் ஷிண்டேவின் பேரணியில் சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.