கர்நாடகா மாநிலம் வந்திருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுவன் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் பயணிப்பது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இன்று 6ஆவது முறையாக கர்நாடகா வந்த பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மண்டியா, தார்வாடில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலையை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து மைசூரு-குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தார்வாட் ஐ.ஐ.டி. நிறுவன கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மண்டியா மற்றும் உப்பள்ளி-தார்வாடில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமரை வரவேற்க ஏராளமானோர் சாலையில் திரண்டனர்.
அப்போது ஒரு பெண் தனது மகனுடன் நிகழ்ச்சி வந்திருந்தார். அந்த சிறுவன் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததால் அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அச்சிறுவன் டி-சர்ட்டை கழட்டிவிட்டு கூட்டத்தில் பங்கேற்றார்.
newstm.in