15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது!


அமெரிக்காவில் வாகனம் நிறுத்துமிடத்தில் போதையிலிருந்த சிறுவனை துஷ்பிரோயகம் செய்ததற்காகப் போதைப் பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் விற்பனை

அமெரிக்காவிலுள்ள டன்கின் டோனட்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்ய முயன்றதாக கூறி போதைப் பொருள் வியாபாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது! | America Boy Face Sexual Harresment In Car@flickr

டன்கின் டோனட்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனுக்குப் போதைப் பொருள் வழங்க ரோகர் கோக் (40) என்பவர் வந்துள்ளார். அப்போது இருவரும் வாகனத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

துஷ்பிரயோக வழக்கு

அந்த நேரத்தில் சிறுவனை ரோகர் கோக் என்ற போதைப் பொருள் விற்பனையாளர் துஷ்பிரோயகம் செய்ய முயன்றுள்ளார். போதையிலிருந்த சிறுவனால் அவரிடமிருந்து மீண்டு செல்லவும் முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கோக் சிறுவனை அடித்து துஷ்பிரோயகம் செய்துள்ளார். சுமார் 40 நிமிடம் அச்சிறுவன் கோக்கிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

இதன்பின் காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில் ரோகர் கோக் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது! | America Boy Face Sexual Harresment In Car@getty images

விசாரணையில் ரோகர் கோக் போதையில் அவ்வாறு செய்து விட்டேன் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தானொரு ஓரினச்சேர்க்கையாளரில்லை எனவும் கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.