80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் நேரடியாக விடுவிக்கப்பட்டனர்.

80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள் | Rajiv Gandhi Case Advovcate Johnson Ibc Interview

ஆனால் முருகன், சாந்தன், ஜெயகுமார் மற்றும் ராபர்ட் ஆகிய நால்வரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், வெளிநாட்டவர் சட்டத்தின் படி, நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் விடுதலைக்கு பிறகும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 11/11/2022ல் விடுதலைக்கு பிறகு அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது 100 சதவீதம் உண்மை என்று வழக்கறிஞர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பேட்டி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை உற்று நோக்கவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.