கடந்த ஓராண்டாக விக்னேஷ் சிவனின் பெயர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றி, நயன்தாராவுடன் திருமணம் என கடந்தாண்டு நல்ல செய்திகளுக்காக ட்ரெண்டிங்கில் இருந்தார் விக்னேஷ் சிவன். மேலும் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான இயக்குனராக உருவெடுத்தார் விக்னேஷ் சிவன்.
எனவே எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என விக்னேஷ் சிவன் நினைத்துக்கொண்டிருக்கும் போது கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்தார் அஜித். விக்னேஷ் சிவன் கூறிய கதை தனக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அவரை AK62 படத்திலிருந்து அஜித் மற்றும் லைக்கா அதிரடியாக நீக்கினர்.
Nayanthara: அடப்பாவமே..நயன்தாராவுக்கா இந்த நிலைமை ? நேரமே சரியில்லை போல..!
இது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அடியாக இருந்தது. ஆசை ஆசையாக அஜித்தின் படத்தை இயக்கலாம் என இருந்த விக்னேஷ் சிவனை அஜித் கடைசி நேரத்தில் கழட்டிவிட்டது விக்னேஷ் சிவனுக்கு மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்திற்கும் அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது. இதையடுத்து அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் தன் 62 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.
மறுபக்கம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தைப்பற்றி பல தகவல்கள் வருகின்றன. ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.ஆனால் எதுவும் இன்றளவும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளர். அது தான் தற்போது வைரலாகி வருகின்றது.தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு விக்னேஷ் சிவன், என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது என பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவனின் பதிவு
இதையடுத்து ரசிகர்கள் சிலர் இவர் அஜித்தை தான் மறைமுகமாக சொல்கிறாரோ என பேசி வருகின்றார். இதைத்தொடர்ந்து தன் அடுத்த படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தான் யார் என நிரூபிக்கும் நோக்கத்தில் தன் அடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.