உலகில் பல புகழ்பெற்ற பாலைவனங்கள் பல உள்ளன. நம் இந்தியாவின் தார் பாலைவனமும், ஆப்பிரிக்கா கண்டத்தின் சஹாரா பாலைவனமும் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை. ஆனால் பனி பொழியும் பாலைவனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பனிப்பொழிவு ஏற்படும் இந்த பாலைவனம், உலகின் மிகச்சிறிய பாலைவனம். இந்த பாலைவனத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சில அடிகள் நடந்தாலே, அதை கடக்க முடியும். இந்த பனி பாலைவனம் நிச்சயமாக ஆச்சரியத்தை அளிக்கிறது. இருப்பினும், இது முற்றிலும் உண்மை. இந்த தனித்துவமான பாலைவனத்தைப் பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்வோம்.
பாலைவனம் அமைந்துள்ள நாடு
இங்கே குறிப்பிட்டுள்ள பாலைவனம் கனடாவின் யூகோனில் அமைந்துள்ளது. இந்த பாலைவனத்தின் பெயர் Carcross Desert. பாலைவனத்தில் பொதுவாக மணல் வெகுதொலைவு வரை தெரியும், ஆனால் கார்கிராஸ் பாலைவனம் ஒரு சதுர மைல் மட்டுமே பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கும்போது களைப்பு ஏற்படுவது இல்லை, அதைக் கடக்க அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. நடந்தே சென்று விடலாம்.
மேலும் படிக்க | 104 பயணிகளுடன் மாயமான ரயில்! 100 ஆண்டுகளாக தொடரும் தேடுதல் வேட்டை!
கார்கிராஸ் பாலைவனத்தில் பனி பொழிவு ஏற்படுவதற்கான காரணம்
கார்கிராஸ் பாலைவனம் ஒரு கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த இடத்தில் இன்னும் மக்கள் வாழ்கின்றனர். கார்கிராஸ் பாலைவனம் மிக உயரத்தில் உள்ளது. இதன் காரணமாக, மற்ற பாலைவனங்களுடன் ஒப்பிடும்போது அதன் வெப்பநிலை மிகவும் குறைவாகவே உள்ளது. குளிர்காலத்தில் இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க | நித்தியானந்தா விடு தூது… சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ