டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.