இன்புளூயன்சா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இன்புளூயன்சா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொரானா காலத்தில் இருந்தது போல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஷியான் நகரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதல் கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்படும். தொடர்ந்து, வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 13 மில்லியன் மக்கள் வாழும் இடத்தில் வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அவசரக்கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது அமல்படுத்தவுள்ள இந்த அவசரநிலை மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் ஏற்கனவே ஜீரோ கோவிட் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்தநிலையில் மீண்டும் ஊரடங்கு என்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in