மிக பரபரப்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிதேஷ் ரானா, 44, அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுடில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக, இவர் ஆஜராகப் போவதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞராக 2015 முதல் பதவி வகித்து வருபவர் நிதேஷ் ரானா.
காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கர்நாடகா காங்.,கை சேர்ந்த டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணமுல் காங்.,கை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் நிதேஷ் ரானா ஆஜராகி உள்ளார்.
அதுமட்டுமின்றி ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியது தொடர்பாக, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் அமைப்புகளுக்கு எதிரான வழக்குகள், தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி பண மோசடி வழக்குகளிலும் இவர் ஆஜரானார்.
நாட்டின் பல்வேறு முக்கிய வழக்குகளில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிதேஷ் ரானா, தன் அரசு வழக்கறிஞர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காக நீதிமன்றத்தில் இவர் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
– புதுடில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement