அறைக்கு அழைத்த இயக்குநர்: பல ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டிவிட்ட அஜித் பட நடிகை

தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் நடித்திருப்பார். இவர் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட the dirty picture படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதோடு அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் கடந்த 2011-ம் ஆண்டு வென்றுள்ளார். 

தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்புக்காக தனக்கு பாலியல் அழைப்பு விடுக்கப்பட்டதாக தைரியமாக தெரிவித்துள்ளார். 

மும்பையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு casting couch மீது நம்பிக்கை இல்லை என்றும், அப்படி தனக்கு வந்த பாலியல் அழைப்பை நிராகரித்ததால் ஒப்பந்தமான படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “தான் ஒப்பந்தமான படத்தின் இயக்குநரை சென்னைக்கு ஒரு விளம்பர பட ஷூட்டுக்காக வந்த போது காபி ஷாப்பில் சந்தித்ததாகவும். அப்போது அவர் தன்னை அவரது அறைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும், அப்போது அவரது எண்ணம் தனக்கு புரியவில்லை என்றும், ஆனால் அறைக்குள் நுழைந்ததும் அறையின் கதவை மூட தான் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இயக்குநர் தன்னை அறைக்குள் அழைத்து நேரடியாக எதையும் பேசவில்லை என்றாலும் அவரது தவறான எண்ணம் புரிந்து அங்கிருந்து வெளியேறியதாகவும் பேசியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த படத்தில் இருந்து வித்யா பாலன் நீக்கப்பட்டாராம். 

வித்யா பாலன் இப்படி பேசியதை அடுத்து அவரது சமூக வலைதள பக்கங்களில் அந்த இயக்குநரை அடையாளம் காட்டச் சொல்லி அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் மனசெல்லாம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்பு அதிலிருந்து நீக்கப்பட்டார் வித்யா பாலன். பல பேட்டிகளில் தன்னை தமிழ் படத்தில் இருந்து நீக்கியதற்காக தான் மிகவும் வருந்தியதாகவும், பின்னர் தனது படங்கள் பாலிவுட்டில் ஹிட் ஆனதும் அதன்பிறகு கிடைத்த தமிழ் பட வாய்ப்புகளை தான் நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நடிக்க தெரியவில்லை என விமர்சனத்துக்கு ஆளான வித்யா பாலன் தேசிய விருதை பெற்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.