லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது Black Panther: Wakanda Forever.