டெல்லி: இந்திய ஜனநாயகம் குறித்து சிலர் லண்டனில் கேள்வி எழுப்புகின்றனர்; இது நாட்டை அவமதிக்கும் செயல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜனநாயக பாரம்பரியம் மீது எந்த சக்தியாலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சமீபத்தில் ராகுல் காந்தி லண்டனில் பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.