தொழில்நுட்பம் நம்மிள் பலருக்கு நன்மையும் தருகிறது அதே சமயத்தில் தீமையும் தருகின்றது.
இதில் இளம் வயதினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஆண் பெண் என பாகுப்பாடு இன்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மையாகும்.
அந்த வகையில் சென்னையில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான விளக்கம்
சென்னை பெரம்பூர் திருவிக நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகள் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
உடல்நிலை சரியில்லை என்று பாடசாலையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் வெகுநேரமாகியும் வீட்டிற்கு மகள் வரவில்லை என சிறுமியின் பெற்றோர் பல இடங்களில்தேடியுள்ளனர்.
தேடியும் கிடைக்காமல் இருந்ததனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
பின்னர் குழந்தைகள் நல அமைப்பு,
சிறுமியின் பெற்றோருக்கு தொடர்புக்கொண்டு காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.
அதன் பின் பொலிசார் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொலிசாரின் விசாரணை
பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி இன்ஸ்டாகிராமில் சேலத்தை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார்.
ஆகவே காதலனை பார்க்க சேலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார் சிறுமிக்கு அறிவுரை கூறி சென்றுள்ளார்.
இவ்வாறு சிறுவயதிலேயே காதலுக்கு வசப்படுவதால் 16 அல்லது 17 வயதிலேயே குழந்தைப் பெற்று கவலைக்கிடமாக தன் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர். ஆகவே சற்று கவனமுடன் செயற்பட்டு வாழவேண்டும் என குழந்தை நல பாதுகாப்பு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.