உக்ரைனின் பாக்முட்டில் கடும் மோதல்-இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்றுவரும் பாக்முட்டில் உள்ள உக்ரைன் வீரர்கள் இன்று கடும் தாக்குதலை எதிர்கொண்டனர்.

டொனெட்ஸ்க் பகுதியில் 24 மணி நேரத்தில் 220-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில், பாக்முட் நகரில் நடைபெற்றுவரும் மோதலில் கடந்த 6-ம் தேதியில் இருந்து ஒருவாரத்தில் மட்டும் 1100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.