எடப்பாடியின் சீரியஸ் டார்கெட்… தெற்கில் தாறுமாறு ஸ்கெட்ச்… ர.ர.,க்களுக்கு அசைன்மென்ட்!

அரசியல் கட்சிகள் சமூக ரீதியில் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதனை தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வைத்தே பெரும்பாலும் கணித்து விடலாம். இதற்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் அதிமுகவை வீழ்த்தவும், கபளீகரம் செய்யவும் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களவை தேர்தல்

இவற்றை சமாளித்து தனித்துவமிக்க தலைவராக உருவெடுக்க மும்முரம் காட்டி வருகிறார்

. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் உட்கட்சி பிரச்சினைகள் முதல் தேர்தல் கூட்டணி வரை பல்வேறு விஷயங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இந்த சூழலில் தான் தெற்கை குறிவைத்து எடப்பாடி வியூகம் வகுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

முக்குலத்தோர் வாக்குகள்

அதிமுகவில் இருந்து

, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே இவர்கள் சார்ந்த முக்குலத்தோர் சமூக வாக்குகளை எடப்பாடியார் அறுவடை செய்வாரா? இல்லை நழுவ விடுவாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. இந்த விஷயத்தை ஈடுகட்டும் வகையில் தான் சிவகங்கையில் பொதுக்கூட்டம், தெற்கில் சுற்றுப்பயணம், ஓபிஎஸ் கூடாரத்தை காலி செய்வது,

அமமுகவிற்கு குறி

அமமுகவிற்கு செக், மாற்று கட்சிகளின் அதிருப்தியாளர்களை அரவணைப்பது என வரிசையாக திட்டங்களை தீட்டியுள்ளனர். இதில் டிடிவி தினகரனின் அமமுகவை சேர்ந்த தென் மாவட்ட புள்ளிகளை குறிவைத்து தனது கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய அசைன்மென்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இதற்கான பலன் படிப்படியாக கிடைத்து வருவதாக தெரிகிறது.

எடப்பாடி அணியில் முக்கிய புள்ளிகள்

முன்னதாக அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளருமான கோமல் ஆர்.கே.அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். இவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் இணைந்தார்.

அணிமாறும் தலைவர்கள்

இந்நிலையில் இன்று அமமுக மாநில இளம் பெண்கள் பாசறை செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் பலருக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தனது ஆதரவை அளித்தார்.

உயரும் செல்வாக்கு

இவர் முக்குலத்தோர் சமூகத்தின் அகமுடையார் பிரிவை சேர்ந்தவர். விரைவில் கள்ளர், மறவர் சமூகத்தை சேர்ந்த பலர் எடப்பாடி உடன் கைகோர்க்க உள்ளதாக ஆதிநாராயணன் தெரிவித்திருந்தார். 2024 மக்களவை தேர்தலுக்குள் அமமுகவில் இருந்து முடிந்தவரை செல்வாக்கு பெற்ற நபர்களை வசப்படுத்த எடப்பாடி தரப்பு வியூகம் வகுத்துள்ளது. இதன்மூலம் தனது செல்வாக்கை கூட்டணி கட்சிகள் மத்தியில் நிரூபித்து காட்டி சீட் விவகாரத்தில் பேரம் பேச திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய அசைன்மென்ட்

இவரது தலைமையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்பது கணக்கு. இதற்காக அடுத்த 13 மாதங்கள் மிகவும் தீவிரமாக செயல்பட ரத்தத்தின் ரத்தங்களுக்கு அசைன்மென்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.