எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக காமெட் (MG Comet EV) என்ற பெயரில் சிறிய ரக கார் ஒன்றை விற்பனைக்கு 200 கிமீ மற்றும் 300 கிமீ ரேஞ்சு என இரு விதமாக விற்பனைக்கு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு கதவுகளை பெற்ற பேட்டரி காரில் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சந்தையில் wuling விற்பனை செய்கின்ற ஏர் இவி காரின் அடிப்படையில் இரண்டு கதவுகளை கொண்ட மாடலாக பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சிறிய அளவிலான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. எம்ஜி, வூலிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவின் SAIC மோட்டார் குழுமத்தின் கீழ் செயல்படுகின்றது.
எம்ஜி காமெட் EV
Wuling Air EV அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள எம்ஜி காமெட் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் எம்ஜி இந்திய தலைவர் ராஜீவ் சாபா காரின் பெயரை உறுதிப்படுத்தினார். மேலும் காமெட் என்ற பெயருக்கு தமிழில் ‘வால்மீன்’ என பொருள்படும். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மேக்ராபர்ட்சன் விமானப் பந்தயத்தில் பங்கேற்ற 1934 ஆம் ஆண்டின் சின்னமான பிரிட்டிஷ் விமானத்தின் பெயரை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தோனேசியாவில் கிடைக்கின்ற ஏர் இவி அடிப்படையில் காமெட் EV காரில் சுமார் 17.3 kWh மற்றும் 26.7 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரி ஆப்ஷன் மூலம் இயக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறைப்பதற்காக பேட்டரி உள்நாட்டில் மிகவும் நம்பகமான டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதால் பேட்டரி பேக் விபரம் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற உறுதியான தகவல் கிடைக்கவில்லை. மேலும், மாடல் 200 கிமீ (17.3kWh) முதல் 300 கிமீ (26.7kWh) வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் அதிகபட்சமாக 50kW (68hp) பவர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெட் EV காரின் இன்டிரியர் தொடர்பான அம்சங்களில் இரண்டு கதவுகளை பெற்று 4 இருக்கைகளை கொண்டிருப்பதுடன் சென்டர் கன்சோலில் நேர்த்தியான ஏசி வென்ட்கள், ஏசி கட்டுப்பாடுகளுக்கான ரோட்டரி கைப்பிடிகள் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள எம்ஜி காமெட் விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம்.