எம்.எம்.அப்துல்லா Vs சவுக்கு சங்கர்..! ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர்! முழு விவரம்!

புதுக்கோட்டையை சேர்ந்தவரான எம்.எம்.அப்துல்லா திமுகவில் NRI Wing செயலாளராகவும் உள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், திடீரென சவுக்கு சங்கருடன் தரை லோக்கலாக சண்டை போட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

பொதுவாக அரசியல் தலைவர்களை வம்பிழுக்கும் வகையில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சவுக்கு சங்கர், இவர் திமுகவினர் பற்றி தொடர்ந்து பல ட்வீட்டுகளை பதிவிடுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். அவருக்கு திமுகவினர் பதிலடி கொடுப்பார்கள். 

இந்தநிலையில், கடந்த மார்ச் 11-ம் தேதி திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா குறித்து சவுக்கு சங்கர் வெளியிட்ட ட்விட்டரில், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் வெளிநாட்டு முதலீடுகளை இவர் தான் பார்த்துக்கொள்கிறார் என பதிவிட்டார். இந்த பதிவை அடுத்து நேரடியாக களத்தில் இறங்கிய அப்துல்லா, ஓபாமாவின் சுவிஸ் முதலீடுகளையும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன் என கிண்டலாக பதிலளித்தார். 

அடுத்தடுத்து சவுக்கு சங்கரை மிக மோசமாக கமெண்ட் செய்தார் அப்துல்லா. அந்த ட்வீட்டுகளை எல்லாம் ரீ-ட்வீட் செய்து சவுக்கு சங்கர் எம்.பி., பேசும் பேச்சை பாருங்கள் என பதிவிட்டார். உடனே அதற்கும் பதிலளித்த எம்.எம்.அப்துல்லா, என்னை எம்.பி. ஆக்காமல் உன்னை மாதிரி ஒருவரை ஆக்குவார்களா என கொஞ்சம் பீப் வார்த்தைகளோடு பதிவிட்டார். 

இந்த உரையாடல் அடுத்தடுத்து சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக போக ஒரு கட்டத்தில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா சவுக்கு சங்கருக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் சவுக்கு சங்கர் ஏன் பதிலளிக்கவில்லை என்னுடன் விவாதிக்க ஆர்வம் இல்லையா என மீண்டும் வம்பிழுத்தார். ஆனால் அதன்பிறகு அப்துல்லாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அடுத்தடுத்த தனக்கு வழக்கமான அரசியல் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சவுக்கு சங்கர் தொடர்ந்து எம்.எம்.அப்துல்லாவை டேக் செய்து பதிவிட்டாலும், அவர் எந்த பதிலும் தரவில்லை. இப்படியாக ஒருவழியாக இந்த பிரச்சனை முடிக்கப்பட்டது. 

தொடர்ந்து ட்விட்டரில் மிக மோசமாக கமெண்ட் செய்து திமுக எம்.பி., யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கருடன் வார்த்தை சண்டையில் ஈடுபட்டது பலரையும் முகம் சுழிக்க செய்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.