காஷ்மீர் எல்லை பகுதி அருகே ஆயுதம், போதைப்பொருள் மீட்பு | Arms, drug recovery near Kashmir border area

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் எல்லை பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர்.

ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கரில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே இரு அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் வாயிலாக பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.