மதுரை மாவட்டம் ஓ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கை, கால்கள் முறிந்த நிலையிலும் தேர்வு எழுத வந்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.
ஓ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி, அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் துணி எடுத்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது கை மற்றும் கால் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து மாணவிக்கு கை, கால்களில் கட்டு போட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாணவி கை, கால்களில் கட்டு போட்ட நிலையில் இன்று தொடங்கிய பொதுத் தேர்வை எழுத தனது உறவினர்கள் உதவியுடன் தேர்வு அறைக்கு வந்தார். அவருக்கு தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து மாணவி இன்று தனது முதல் தேர்வான தமிழ்ப் பாடத்தை எழுதிப் முடித்துள்ளார். கை, கால்கள் முறிந்த நிலையிலும் ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in