சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’

95th Academy Award 2023: நாட்டு நாடு RRR சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது நாட்டு நாடு பாடல். இதுமிகப்பெரிய சாதனையாகும். 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததற்குக் காரணம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஆஸ்கர் விருதையும் வெல்லும் என பலரும் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

இசையமைப்பாளர் கீரவாணி இசையில், சந்திரபோஸ் எழுதிய பாடல் இது. ’நாட்டு நாட்டு’ பாடலுக்கான நடனத்தை வடிவமைத்தவர் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்.  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்.

கடந்த காலங்களில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் உள்ளிட்ட இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது RRR திரைப்படம்.

RRR பாடலான நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப்ஸில் ‘சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான’ விருதை பெற்று வரலாறு படைத்த நிலையில், தற்போது ஆஸ்கரையும் வென்று நீண்ட கால சாதனையை சரித்திரத்தின் பொன்னேட்டில் எழுதியுள்ளது, இந்திய விடுதலை சரித்திரத்தைச் சொன்ன திரைப்படம்.

மேலும் படிக்க: Oscar Nominations 2023: ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல்.. எப்போ? எங்கே? எப்படி?

95வது ஆஸ்கார் விருது பெற்றஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு, உலகம் முழ்வதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆங்கிலேயர் எதிர்ப்பு என்ற கதைக்களத்தில் தேசப்பற்று, பக்தி என்ற மந்திரங்களோடு, ராம்சரண்,  ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட் என அதகளம் செய்த இயக்குநர் ராஜமெளலி, நாட்டு நாட்டு பாடலில் ரசிகர்களுக்குக் நடன விருந்தளித்திருந்தார்.

இந்தப் படத்தில், ராம்சரண்,  ஜூனியர் என் டி ஆர், ஜூனியர் என் டி ஆர் உட்பட பெரிய நடிகர் பட்டாளமே நடனம் ஆடியிருந்தது. இந்தப்பாடல் உலக அளவில் புகழ்பெற்று பல சாதனைகளை படைத்திருந்தது.

மேலும் படிக்க: ஆஸ்கரில் வரலாறு படைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல்!

மேலும் படிக்க: வில் ஸ்மித்தின் செயலால் பறிபோகிறது ஆஸ்கார் விருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.