சென்னை: சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 வாரங்களில் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை முடிக்க சென்னை பெருநகரில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் உள்ளது.