“ஜனநாயகத்தை காப்பது யார் ?” ராகுல் பேச்சால் ஆத்திரமுற்ற மத்திய அரசு| Rahul Gandhi, In Shameless Manner…”: Government Slams London Remarks

புதுடில்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்து பேசுவது கண்டிக்கத்தக்கது என காங்., எம்பி., ராகுலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது .

இன்றைய பார்லி., கூட்டம் துவங்கியதும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில்:

வெளிநாட்டில் இந்தியாவை அவமதிப்பதா ? மத்திய அரசு கண்டனம்

ராகுல் சமீபத்திய லண்டன் கூட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பறிபோய் விட்டதாக கூறியுள்ளார். இது நாட்டை அவமதிப்பதற்கு சமம். இது வெட்கப்பட வேண்டிய செயல். ராகுல் இந்த அவையின் உறுப்பினர் கூட , எனவே அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும். மேலும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் பியூஷ்கோயலும் ராகுல் மீது கடுமையாக சாடினார்.

மல்லிகார்ஜூன் கார்கே பதிலடி

latest tamil news

இதனையடுத்து பார்லி.,க்கு வெளியே எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்: ஜனநாயகத்தை நசுக்குபவர்கள், அழிப்பவர்கள் காப்பாற்றுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.,வினர் ஜனநாயக காவலர்கள் போல நாட்டின் பெருமையை காப்பது போல் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.