ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா


ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தி இருப்பது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா- தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது.

ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா | North Korea Fires Missile Into Japan SeaKCNA / KNS / VIA AFP-JIJI

இது நிலையற்ற தாக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஜப்பான் கடல் பாய்ந்த ஏவுகணை

இந்நிலையில் வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் குறைந்தது ஒரு ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியது உள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். 

 தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா | North Korea Fires Missile Into Japan SeaKCNA / KNS / VIA AFP-JIJI

மேலும் ராக்கெட் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் நிலையையும் பேணி வருகிறது” என்றும் தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS) தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.