ஜவளகிரி வனப்பகுதியில் விலங்குகள் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை,  உரிகம், ஜவளகிரி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள், சிறுத்தைகள், மயில் மற்றும் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் வாழும் வன விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வனத்துறையினர் இந்த பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாழும் வன உயிரினங்கள் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன. ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் யானை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மற்றும் மயில் பறவைகள் தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.