மாஸ்கோ: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை குறித்து அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி – 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, அடுத்தாண்டு செப்., 9 மற்றும் 10 ல் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா பங்கேற்கிறது.
இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கிறார் என செய்திகள் வெளியாயின.
இச்செய்திக்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்தது. இது குறித்து அதிபர் மாளிகையான கிரம்ப்ளின் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய அதிபரின் இந்திய பயணத்திட்டம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement