இண்டிகோ ஏர்லைன் விமானம் 6E-1736 டெல்லியிலிருந்து தோஹா (கத்தார்) புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருக்கும் போது நைஜீரியராவைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகு இண்டிகோ விமானத்தின் பைலட் கராச்சி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்புகொண்டு, மருத்துவ அவசரநிலை காரணமாக , விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லி -தோஹா பயணிகள் விமானம் அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
உடனே நோய்வாய்ப்பட்ட பயணியை விமானம் தரையிறக்கியதும், மருத்துவக் குழு அவரை பரிசோதித்தது. ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, இறந்த பயணியுடன் விமானம் மீண்டும் டெல்லிக்கு பறந்தது. இந்த செய்தி குறித்து தகவல் தெரிவித்த இன்டிகோ நிறுவனம்,” எங்கள் பயணி இறந்த செய்தியால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
எங்கள் பிரார்த்தனைகளும், இரங்கலும் அவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இருக்கிறது. நாங்கள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்” என்று Iதெரிவிதந்திருக்கிறது.